வாகன இறக்குமதி தடை நீக்கம்: நிதி அமைச்சின் புதிய தகவல்

OruvanOruvan

நாட்டில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், வரி வருமானம் அதிகரிக்கும் என்றும், வாகனங்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படும் என்றும் எங்களால் உறுதியளிக்க முடியாது.

அதிக அந்நியச் செலாவணியைப் பெறுதல், அந்நியச் செலாவணி அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாது. இதுவரை எடுக்கப்பட்ட பல்வேறு கடினமான தீர்மானங்களினால் இலங்கை தற்போது பலமடைந்து வருகிறது.

வாகன இறக்குமதித் தடை தற்போது தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களுக்கு மாத்திரமே அமுலில் உள்ளதாகவும் ஏனைய துறைகளுக்கு அமுலில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நினைவூட்டினார்.

வாகனங்கள் மீதான இறக்குமதித் தடையை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அண்மைய ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் அவர் இந்த விடயத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.