Header Ads

நித்தியானந்தாவின் சீடர்களின் மோசமான செயல்


நித்தியானந்தாவின் சீடர்களால் அபகரிக்கப்பட்ட 30 கோடி ரூபா பெறுமதியான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

 பல்லாவரம், திரிசூலம் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள மலை புறம் காணி உள்ளது. 30 கோடி ரூபா மதிப்பிலான இந்த நிலத்தை நித்தியானந்தா குழுமத்தினர் சுமார் 7 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர்.

அதே போன்று அந்த நிலத்தை வேறு சிலரும் ஆக்கிரமித்து அதில் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதையறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுதொடர்பாக ஏற்கெனவே கடிதம் வழங்கப்பட்டு இருந்தது.  

இருந்த போதிலும் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை கைவிட மறுத்ததால், நேற்று பல்லாவரம் வட்டாட்சியர்ட்டி. ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர், பொலிஸார் முன்னிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் தனியார் வசம் இருந்த குறித்த காணி மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறும்போது, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 30 கோடி இந்திய ரூபா இருக்கும் என்று தெரிவித்தனர். 



No comments

Powered by Blogger.