2024 மே 01, புதன்கிழமை

அரசியல் களத்தில் பெண்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்

Simrith   / 2024 ஜனவரி 04 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் நடைமுறைகளுக்கான தேவையை வலியுறுத்தும் மற்றும் அவற்றைக் கண்காணிக்கும் பஃரல் அமைப்பின் ” இளைஞர்களுக்கான ஜனநாயக கல்விக்கூட” மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட,  கிராம மட்ட பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆளுமைகளுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று இக்கற்கைக்கான பஃரலின் ஆலோசகர் திரு. சொர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) ஆரையம்பதி பல்நோக்கு கூட்டுறவு சங்க மண்டபம், மட்டக்களப்பில் நடைபெற்றது.

பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தி எதிர்கால தேர்தல்களில் அவர்களின் அங்கத்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட இச்செயற்றிட்டத்தில் ,முன்னாள் பெண் வேட்பாளர்கள் உட்பட பிற தலைவர்களும் தமது அனுபங்களையும் அறிவுரைகளையும் பகிர்ந்து கொண்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

தேர்வு செய்யப்பட்ட கிராம மட்ட பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆளுமைகளுக்கிடையிலான குறித்த கலந்துரையாடலில், பஃரலின் இளைஞர்களுக்கான ஜனநாயக கல்விக்கூட கற்கைக்கான ஆலோசகர் திரு.ஆறுமுகம் சொர்ணலிங்கம், மார்ச் 12 இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான திரு. சிவயோகநாதன், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளரான திரு. சுந்தரலிங்கம்,

ஆரையம்பதி பிரிவின் வேட்பாளரும் மார்ச் 12 இயக்க உறுப்பினருமான சேதீஸ்வரி அவர்கள், செங்கலடி பிரிவின் முன்னாள் வேட்பாளரான மதனா மேலும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான திரு.சசிதரன் மற்றும் செங்கலடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான கந்தசாமி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X